சென்னை வீதிகள் முதல் உலக அரங்கம் வரை பெருமைப்படுத்தியவர் அஸ்வின்.. உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Dec 19, 2024,05:21 PM IST

சென்னை: சென்னையின் வீதிகள் முதல் உலக அரங்கம் வரை தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் ஏற்படுத்திய தாக்கம், என்றென்றும் நினைவ கூரப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.  இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஒய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.




நேற்று ஓய்வை அறிவித்த அஸ்வின் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் சென்னை விமான நிலையத்திற்கே வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள அஸ்வினின் இல்லம் முன்னர் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஸ்வினின் தந்தை அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினார்.


இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும்  விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், சென்னை முதல் உலக அரங்கு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.அஸ்வின், ஒரு கிரிக்கெட் வீரராக உல்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும்,ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்