செலவு ஜாஸ்தியாய்ருச்சாம்.. 6000 பேருக்கு வேலை போச்சு.. அதிரடி ஆட்குறைப்பில் டெல் நிறுவனம்!

Meenakshi
Mar 28, 2024,05:59 PM IST

டெல்லி: செலவினங்களை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.


கணினி உலகில் பல முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக டெல் நிறுவனம் இருந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்புட்ப நிறுவனம் இது. கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி , விற்பனை மற்றும் சேவைகளை செய்து வருகிறது. உலகளவில் இந்நிறுவனத்தில் 1,03,300 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் டெல் நிறுவனத்தில் சுமார் 27,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




டெல் நிறுவனம் இதற்கு முன்பு பல பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொண்டு சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனம் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து டெல் நிறுவனத்தின் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்தாண்டும் ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக டெல் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், நாங்கள் இதற்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ளோம். அதிலிருந்து வலுவான முறையில் மீண்டு வந்துள்ளோம். இப்போதும் நாங்கள் நிச்சயம் போராடி மீண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளது.