Diwali 2024: டமால் டுமீல்.. தீபாவளிக்கு வரிசை கட்டும்.. புது வரவு பட்டாசுகள்.. என்னென்ன வந்திருக்கு?

Manjula Devi
Oct 22, 2024,06:23 PM IST

சிவகாசி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் விதவிதமான புதுவரவு பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.


தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசும் புத்தாண்டுகளும் தான். தீபாவளி அன்று காலை எழுந்தவுடன் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடைகள் அணிந்து  பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர். இதற்காக மக்கள் புது ஆடைகள் மற்றும்  புது ரக பட்டாசுகளை வாங்க  ஆர்வம் காட்டி வருகின்றனர்‌.


கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காளைகட்ட துவங்கி உள்ளது. அதேபோல் என்னதான் அரசு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் பட்டாசு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக குட்டி ஜப்பான் என அழைக்கக்கூடிய பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியில் 2500 கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசு விற்பனை படு வேகமாக நடைபெற்று வருகின்றன.




இந்த நிலைமையில் தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தற்போது சிவகாசியில் பட்டாசு விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது. அதிலும் இந்த வருடம் வித விதமான புது ரக பட்டாசுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிராக பட்டாசுகள் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. அப்படி என்னென்ன புதுவரவு பட்டாசுகள் சந்தைகளில் வந்துள்ளன தெரியுமா. வாங்க பார்ப்போம்.


குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்மார்ட் செல்போன் வடிவ பட்டாசுகள், செல்பி ஸ்டிக், டிவி லோகோ போன்ற வடிவத்தில் புது மாடல் பட்டாசுகள் சந்தைக்கு வந்துள்ளன. இது மட்டுமில்லாமல் ரிமோட் கார் பட்டாசு, மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய வால்போன்ற வடிவத்தில் பட்டாசு, ஈமு கோழி பட்டாசு, ஆட்டோகிராப் பட்டாசு, மைக் வடிவ பட்டாசு போன்ற புது புது ரக பட்டாசுகளும் இந்த வருடம் அறிமுகமாகியுள்ளன. இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளதால் இதனை வாங்க மக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிகளவு பட்டாசுகளை வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். 


தற்போது புது ரக பட்டாசுகளை வாங்க  வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு பட்டாசுகளின் விற்பனை அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் மகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்