தீபாவளிக்கு கிளம்பியாச்சா.. 3 பஸ் நிலையங்கள்.. 14,086 பஸ்கள்.. எங்கிருந்து புறப்படும்.. Full list!

Su.tha Arivalagan
Oct 27, 2024,01:12 PM IST

சென்னை: தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசு இயக்கும் சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும் என்ற தகவலை அரசுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. எனவே பயணிகள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.


தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள், அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.


3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்தும், பிற ஊர்களிலிருந்தும் இயக்கப்படவுள்ளன. சென்னையில் சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்ற விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.




கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு முனையம்


திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.


(திண்டிவனம் வழி) பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம்.


(தஞ்சாவூர் மார்க்கம்) பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள்.


கோயம்பேடு, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு


வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.


திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.


கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள்


மாதவரம் புதிய பேருந்து நிலையம் 


பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள். 


திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் என்று பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்