ஆகஸ்ட் 04 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Aug 04, 2024,10:41 AM IST

இன்று ஆகஸ்ட் 04, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 19

ஆடி அமாவாசை, மேல் நோக்கு நாள்


இன்று மாலை 05.32 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. ஆகஸ்ட் 03 ம் தேதி மாலை 04.56 மணி துவங்கி, ஆகஸ்ட் 04 ம் தேதி மாலை 05.32 வரை அமாவாசை திதி உள்ளது. பகல் 02.55 மணி வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை -  01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை 

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை 

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


 பித்ருக்கள் வழிபாடுகள் செய்வதற்கு, நவக்கிரக சாந்தி செய்வதற்கு, உபகரண பழுதுகளை சரி செய்வதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆடி அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடுவதால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.