வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் வஹிதா ரஹ்மான். இவருக்கு வயது 85. 1955ம் ஆண்டு ரோஜூலு மராயி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
அதன் பின்னர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபவும் 40 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்தவர். கடைசியாக கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தில் கமலுக்குத் தாயாக நடித்திருந்தார்.
தேசிய திரைப்பட விருது, பிலிம்ஃபேர், பிலிம்ஃபேர் லைஃப் டைம் சாதனை விருது, என்டிஆர் தேசிய விருது, பத்மஸ்ரீ ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது , 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.