ஏமன் நாட்டில்.. கரையைக் கடந்த .. "தேஜ்" புயல்..!

Su.tha Arivalagan
Oct 24, 2023,11:14 AM IST

சென்னை: ஏமன் நாட்டில் இன்று அதிகாலை கரையைக் கடந்தது தேஜ் புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்கனவே ஒரு வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது. 


இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறியது. இதற்கு தேஜ் என பெயரிடப்பட்டது. இது இந்தியா வைத்த பெயராகும். மேலும் இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது.




தென்மேற்கு அரபிக் கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் மற்றும் அதை ஒட்டிய ஏமன் கடலோர பகுதிக்கு நகர்த்துச் சென்றது. இந்தப் புயல் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்கள் மழை தொடரும் எனவும், இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவித்திருந்தனர்.


இந்நிலையில் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3:30க்குள் தேஜ் புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.