புதுச்சேரி அருகே நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
சென்னை: ஃபெஞ்சல் புயல் முழுமையாக கரையைக் கடந்து விட்ட போதிலும் கூட புதுச்சேரி அருகே அது இன்னும் கலையாமல் அப்படியே நிலை கொண்டுள்ளதால் இன்றும் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக அலைக்கழித்து வந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரிக்கு வெகு அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரி முழுவதும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடானது. குறிப்பாக மயிலம் பகுதியில் கிட்டத்தட்ட 498 மில்லி மீட்டர் அளவுக்கு அதீத மழை கொட்டித் தீர்த்தது.
இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து வலுவிழக்காமல் நிலை கொண்டுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மழை அறிவிக்கையையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை
மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டனம், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் காரைக்கால்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்