ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்
Nov 30, 2024,06:46 PM IST
சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயலின் திசை மாறுவதால் அது கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான புயலுக்கு ஃபெஞ்சல் என பெயர் இடப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்த இந்த புயல், பிறகு புயலாக மாறி தரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. கடலில் புயல் இருக்கும் வரை சென்னையில் மிதமான மழை விட்டு விட்டு தொடரும். தற்போது புயல் மகாபலிபுரம்-கல்பாக்கம் கரையோரத்தில் உள்ளது. இது கல்பாக்கம்-செய்யூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்