மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன்?.. திண்டுக்கல்லில் இவரா??.. நாளை சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Manjula Devi
Mar 14, 2024,06:10 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை தேர்வு செய்யப்படவுள்ளனர்.


லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் மதுரையில் சு. வெங்கடேசனும், கோயும்புத்தூரில்  நடராஜனும் போட்டியிட்டு வென்றனர். இந்த முறை கோவைக்குப் பதில் திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு யார் என்பது முடிவு செய்யப்படும்.




மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசனே போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அவர் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார். மதுரையைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் பாப்புலரான நபராகவும் மாறி நிற்கிறார் சு. வெங்கடேசன். எனவே மீண்டும் மதுரையில் அவரே வேட்பாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


திண்டுக்கல்லில் இரண்டு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் பாலபாரதியின் பெயர் பலமாக அடிபடுகிறது. அவர்  ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். சிறந்த செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். அவருக்கு சீட் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.