மோடி அரசின் தவறான நிர்வாகமே ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசைக் கண்டித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே அமைச்சகத்தை பாஜக அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது. இதனை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அடிக்கோடிட்டுக் காட்டுவது எங்களது கடமையாகும்.
ரயில்வே அமைச்சகத்தை பாஜக அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது.ரயில்வே நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இன்று நடந்த விபத்தே சாட்சி. தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும், ரயில் விபத்திற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.