காங்கிரஸின் 39 வேட்பாளர்கள் .. 50க்குக் கீழே 12.. 60க்கு மேலே 12 பேர்.. 70க்கும் மேலே 7 பேர்!
டெல்லி: காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி வேட்பாளர்களையும், பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பலர் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 34 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. மொத்தம் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் பெண்கள் ஆவர். எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 27 பேர். 57 பேர் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். 50, 60, 70 வயதுக்கு மேற்பட்டோர் எத்தனை பேர் என்ற விவரத்தை பாஜக சொல்லவில்லை.