மார்ச் 15 - சஷ்டியும், கிருத்திகையும் இணைந்து வரும் அற்புத நாள்
இன்று மார்ச் 15, 2024 - வெள்ளிகிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 02
சஷ்டி, கிருத்திகை, வளர்பிறை, கீழ் நோக்குநாள்
காலை 04.41 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 09.46 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.22 வரை மரணயோகமும், பிறகு இரவு 09.46 வரை சித்த யோகமும், அதற்கு பிறகு மரண யோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நிலத்தை தோண்டுவதற்கு, கடன் அடைக்க, நோய்க்கு மருந்துண்ண, சிலம்பாட்டம் போன்ற தற்காப்பு கலைகள் கற்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபடுவதால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - முயற்சி
கடகம் - வரவு
சிம்மம் - லாபம்
கன்னி - சினம்
துலாம் - பகை
விருச்சிகம் - அச்சம்
தனுசு - பாசம்
மகரம் - தோல்வி
கும்பம் - நன்மை
மீனம் - பக்தி