சென்னை மக்களே இதைக் கவனிங்க.. மெட்ரோ பணிகளுக்காக.. நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

Su.tha Arivalagan
Jan 06, 2024,06:33 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதையடுத்து சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்படடுள்ளன. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில்  பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட அசவுகரியங்கள் இருந்தாலும் கூட மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்தப் பணிகளை மக்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.


இந்த நிலையில் முக்கியமான மூன்று போக்குவரத்து மாற்றத்தை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  மெட்ரோ பணிகளை முன்னிட்டு 7ம் தேதி முதல் கீழ்க்கண்ட மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்படும்.



பாதை 1 - ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே மடம் சாலை முதல்  ராயப்பேட்டை ஹைரோடு வரை)


பாதை 2 - ராமகிருஷ்ணா மடம் சாலை (லஸ் ஜங்ஷன் முதல் திருமயிலை ரயில் நிலையம் வரை)


பாதை 3 - ராமகிருஷ்ணா மடம் சாலை (திருவெங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)



இதற்குப் பதிலாக மாற்று போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள், வாகனதாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிஎம்ஆர்எல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மெட்ரோ பணிகள் சிரமமில்லாமல் நடைபெறுவதற்காகவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்யப்பட்டுள்ள மாற்றுப் போக்குவரத்து வழிகள் தொடர்பான விளக்கமான தகவல்களையும் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.