உயிர் மற்றும் உரிமை பிரச்சினை.. மக்களிடம் கொண்டு சேருங்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ

Manjula Devi
Feb 28, 2025,07:56 PM IST
சென்னை: தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறு சீரமைப்பையும் எதிர்கொண்டிருக்கிறது.இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை, மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதற்கிடையே முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் நாளை மார்ச் 1ஆம் தேதி கொண்டாட திமுக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட விரும்பவில்லை. அதே சமயத்தில் திமுக தொண்டர்கள் உயிர் பிரச்சனையான மும்மொழிக் கொள்கையும், உரிமைப் பிரச்சினை ஆன தொகுதி மறு சீரமைப்பின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

வீடியோவில் முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: 



நான் எனது பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாட விரும்பவில்லை. ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் பிறக்கிறது, கழக அரசு சாதனைகளை கழக அரசு கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொது கூட்டத்தை நடத்துவது என்று செயல்படுவார்கள். இந்த முறை என் பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்து இருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு கோரிக்கையை முன் வைக்கிறேன். இன்று தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறு சீரமைப்பையும் எதிர்கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறு சீரமைப்பு என்பது நமது மாநிலத்துடைய சுயமரியாதை, சமூகநீதி, நமது சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை மக்களிடம் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். 

இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும். இப்போது கர்நாடகா, பஞ்சாப் தெலுங்கானாவில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்திருக்கிறது. இதை பார்த்து ஒன்றிய அரசு எங்கே திணிக்கனும் என்று சொல்லிக்கிட்டு அதற்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்துக் கொள்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் நமக்கான நிதி இன்னும் தரவில்லை.

அதேபோல் தமிழ் நாட்டுக்கான தொகுதிகளை குறைக்கு மாட்டோம் என்று சொல்கிறார்களே, தவிர மற்ற மாநிலங்கள் உடைய எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள்.

நாம் கேட்கிறது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டோடு வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்தின தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால் தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாமம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் தமிழ்நாட்டு நலனையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் நன்றி என பதிவிட்டுள்ளார்.