முதல்வருக்கு 3 தனிச்செயலாளர்கள் நியமனம்.. ஆணை பிறப்பித்தது தமிழக அரசு

Meenakshi
Aug 20, 2024,02:26 PM IST

சென்னை: முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.  இரண்டாவது தனி செயலாளராக எம்.எஸ்.சண்முகமும்,  மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


முதல்வரின் தனிச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தனிச் செயலாளர்களாக 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின்  தனி செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமை செயலாளராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




உமாநாத் ஐஏஎஸ்


முதல் தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, தொழில்துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட  13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


 சண்முகம் ஐஏஎஸ்

 

இரண்டாவது தனி செயலாளரான சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


அனு ஜார்ஜ் ஐஏஎஸ்


மூன்றாவது தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜிற்கு முதல்வரின் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கப்டடுள்ளது.


இந்த தனிச் செயலாளர்கள் குறித்த அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்