தஞ்சையில் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கிங் செய்து  பிரச்சாரம் செய்தார்-முதல்வர் மு.க ஸ்டாலின்

Manjula Devi
Mar 23, 2024,10:53 AM IST

சென்னை: தஞ்சை சத்யா விளையாட்டு மைதானத்தில் வாக்கிங் சென்று கொண்டே பொதுமக்களிடம் வாக்கு  சேகரித்தார்முதல்வர் மு க ஸ்டாலின்.


இதனை அடுத்து இன்று மாலை  திருவாரூர் கொடராச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.




லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கூட்டணி கட்சி  தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று திருச்சி சிறுகனூரில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதனை முடித்துவிட்டு அன்று இரவு தனியார் ஹோட்டலில் தங்கினார்.  இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் வருகை தந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.


இரண்டாவது நாளாக இன்று காலை தஞ்சை சத்யா விளையாட்டு மைதானத்திற்கு சென்றார் முதல்வர் மு க ஸ்டாலின். அங்கு இளம் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் ஆரவாரத்துடன் கைகளை தட்டி முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி, முதல்வர் இளைஞர்களுடன் வாலிபால் ஆடினார். 


மைதானத்தில் உள்ள பொதுமக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் வாக்கிங் செய்து கொண்டே தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர்  முரசொலியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இவருடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி, ஆகியோர் உடன் இருந்தனர்.




இதனை அடுத்து இன்று மாலை திருவாரூர் கொடராச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது தஞ்சை, நாகை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.


பாதுகாப்பு:


வாக்கிங் செய்து கொண்டே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தஞ்சை சத்யா மைதானத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தஞ்சையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.