அரசியல் வெளியில் புதுத் திசையை உருவாக்கியவர் விஜயகாந்த்.. கமல்ஹாசன் புகழாரம்

Aadmika
Dec 28, 2023,11:18 AM IST

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி சினிமா துறையை சேர்ந்தவர்களும் எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.


கமல்ஹாசன் - எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைபிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். 


எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாமாக இருந்தது. சினிமா, அரசியல் இருண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மாரி செல்வராஜ் - அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். மிஸ் யூ கேப்டன்




த்ரிஷா - இரங்கல்கள் கேப்டன். பிரேமலதா அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நிறைய அன்பு, வலிமையும் தர வேண்டும். உங்களின் கணிவை என்றும் மறக்க முடியாது. 


ஆர்த்தி கணேஷ்கர் - கேப்டன் கருப்பு எம்ஜிஆர், அன்னதான ராஜா...வாரி வழங்கும் வள்ளல்...ஏழைகளின் சாமி.. தங்கத்தலைவன்


பா.ரஞ்சித் - ஆழ்ந்த இரங்கல்கள். மிஸ் யூ


ஜூனியர் என்டிஆர் - விஜயகாந்த் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவுரும் வருந்துகிறேன். சினிமா, அரசியல் இரண்டிலும் உண்மையான பவர்ஹவுசாக இருந்தவர். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


பாரதிராஜா - விஜயகாந்த்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் திரைப்பட துறைக்கு அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.




கெளதமி - கேப்டன் அவர்களின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்க மனசுக்காரர். அவர் ஒரு நல்ல தலைவர். எந்த இடத்தில் இருந்தாலும் அதில்  ஜொலித்தவர்.  அவரை அனைவருமே ரொம்ப மிஸ் செய்வோம்.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.


குஷ்பு - ஒரு ஜெம்மை இழந்து விட்டோம். தங்க மனசு படைத்த மனிதர். எங்களது அன்புக்குரிய கேப்டன், எங்களுடைய விஜயகாந்த். இனியாவது நீங்கள் அமைதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அவருடைய குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.


ஏ.ஆர்.முருகதாஸ் - அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.