"சென்னை மெட்ரோ நல்ல மெட்ரோ".. பெண்கள் ஹேப்பி.. அதை இரட்டிப்பாக்க CMRL சூப்பர் பிளான்!

Meenakshi
Oct 25, 2023,05:01 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ மிக மிக பாதுகாப்பான பயணத்தைத் தருவதாக பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது சிஎம்ஆர்எல். நிறுவனம். இதையடுத்து மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அது கையில் எடுத்துள்ளது.


சென்னை மெட்ரோ சேவை அகில இந்திய அளவில் அட்டகாசமான சேவையாக பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவையை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த ரயில் சேவை வரப்பிரசாதமாகவே கருதுகின்றனர்.




பயணிகள் வசதிக்காக,  மெட்ரோ சேவையில் அடிக்கடி  மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது வழக்கம். அப்படித்தான் தற்பொழுது பெண்களின் பாதுகாப்பிற்காக சில திட்டங்களை செயல்படுத்த  மெட்ரே ரயில் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேக உதவி எண், உதவி எண்களுக்கு பதிலளிக்கும் இடத்திலும் பெண்களை பணியமர்த்துவது, ஒவ்வொரு ரயில்களிலும் ஒரு பெண் காவலரை பணிக்கு நியமித்தல், ரயில் நிலையங்களில் கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்துவது போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்  நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


இதற்காக சென்னை சைதா பேட்டை, ஆலந்தூர், திருமங்கலம் உள்ளிட்ட  41 இடங்களில் 12000 த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கேட்ட தகவல்களை பரிசீலித்த பிறகு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம்  தெரிவித்துள்ளது. மேலும்,  இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் 2 மாதங்களுக்குள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால் பெண்களின் மெட்ரே ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதாக இருப்பதாக  பெண்கள் மிகப் பெரிய அளவில் கருத்து தெரிவித்துள்ளனர். இப்போது கூடுதல் சேவைகளும் கிடைக்கும்போது பெண்களுக்கான மிகச் சிறப்பான போக்குவரத்து சேவையாக இது மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.