கொசுவை எப்படி ஒழிக்கலாம்?.. மேயர் தலைமையில் ஆக்ஷனில் குதித்தது சென்னை மாநாகராட்சி!

Su.tha Arivalagan
Feb 12, 2023,04:39 PM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


சென்னையில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுத் தொல்லை இதுவரை இல்லாத நிலையில் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொசுக்கடியால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும், நோய்களும் பரவும் என்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.



இதற்கேற்ப சென்னையில் காய்ச்சலும் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து  கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொசு மருந்து அடிப்பது, சாக்கடைகள் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் அதை சுத்தம் செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.


Jokes: என்ன இது.. சாம்பார்ல ஒரே சில்லறையா கிடக்குது!



இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டமானது மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.