நடிகர் சிவாஜிகணேசன் வீட்டை ஜப்தி செய்ய.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Mar 03, 2025,06:52 PM IST
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி பங்குதாரராக ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனம் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.
இந்த கடன் தொகைக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், கடன் தொகையை திருப்பி தராததை முன்னிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அதன்படி, நீதிபதி ரவீந்திரன் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும் படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.