சென்னையிலிருந்து கோவை செல்ல.. வந்தே பாரத் ரயிலில் கட்டணம் என்ன தெரியுமா?

Su.tha Arivalagan
Apr 08, 2023,07:54 AM IST

சென்னை: சென்னை - கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.


இந்தியாவின் அதி வேக ரயில் முதல் முறையாக தமிழ்நாட்டின் இரு பெரும் நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் எப்போது புறப்படும், டிக்கெட் கட்டணம் என்ன, எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்  என்பது குறித்து இப்போது பார்ப்போம்.



  • சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் 13வது வந்தே பாரத் சேவையாகும்.
  • தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள 2வது வந்தே பாரத் ரயில் இது. முதல் ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்படுகிறது.
  • சென்னை - கோவை ரயில், தமிழ்நாட்டுக்குள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.
  • வந்தேபாரத் ரயில்பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.
  • பயோ வேக்கம் டாய்லட்டுகள், வைஃபை வசதி, சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் பயணிகள் தகவல் முறை, தானியங்கிக் கதவுகள் இந்த ரயிலின் சிறப்பம்சமாகும். ரயிலிலேயே கேட்டரிங் வசதிகளும் உள்ளன. வெஜிட்டேரியன் மற்றும் அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும்.
  • சென்னை - கோவை  வந்தே பாரத் ரயிலானது இடையில் திருப்பூர், ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு ஆகிய நிலையங்களில் மட்டும்  நின்று செல்லும்.
  • சென்னை - கோவை இடையிலான பயண நேரம் 6 மணி 10 நிமிடங்கள் ஆகும்.
  • புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.
  • சென்னை - கோவை இடையிலான பயணத்தில் சேர்கார் கட்டணமானது ரூ. 1057 ஆகும். அதுவே எக்சிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ. 2310 ஆகும்.
  • சென்னை - திருப்பூர் ரயில் கட்டணம் சேர் கார் ரூ. 1130, எக்சிகியூட்டிவ் கட்டணம் ரூ. 2145.
  • சென்னை - ஈரோடு ரயில் கட்டணம் சேர் கார் ரூ. 1055, எக்சிகியூட்டிவ் கட்டணம் ரூ. 1995
  • சென்னை - சேலம் ரயில் கட்டணம் சேர் கார் ரூ. 970, எக்சிகியூட்டிவ் கட்டணம் ரூ. 1805
  • சென்னை சென்டிரல் - கோவை இடையிலான ரயில் (20643) பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இரவு 8.15 மணிக்கு கோவையை சென்றடையும். சேலத்தில் 5.48  மணிக்கு நிற்கும். ஈரோட்டில் 6.32, திருப்பூரில் 5.50 மணிக்கு நிற்கும்.
  • கோவை சென்னை வந்தே பாரத் ரயில் (20644) காலை 6 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் நிலையத்தை வந்தடையும். வழியில் திருப்பூரில் காலை 6.35, ஈரோட்டில் 7.12, சேலத்தில் 7.58 மணிக்கு ரயில் நிற்கும்.