சென்னையில் டிரெய்னைப் பிடிச்சா.. ஜஸ்ட் 4 மணி நேரம்தான்.. பெங்களூரு போய்ரலாம்!
Aug 19, 2023,09:59 AM IST
சென்னை: சென்னை டூ பெங்களூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. மேலும் சில ரயில்களின் பயண நேரமும் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையப்போகிறது.
சென்னை - ஜோலார்பேட்டை இடையிலான விரைவு ரயிலின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் சீரமைக்கப்பட்டதால் தெற்கு ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல அரக்கோணம் -ஜோலார்பேட்டை இடையிலான பயண நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களின் பயண நேரம் குறைப்பால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களின் பயண நேரமும் 4.25 மணி நேரமாகவும் , ஆகவும் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரமாகவும் குறையும். பெங்களூரு மட்டுமல்லாமல், இந்த மார்க்கத்தில் கோவை ,கொச்சி ,திருவனந்தபுரம், கோழிக்கோடு ,மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.