சந்திரயான் 3.. நிலவின் நீள்வட்ட பாதை பயணம் ஓவர்.. அடுத்த ஸ்டாப் நிலா தான்!

Aadmika
Aug 20, 2023,11:10 AM IST

டெல்லி : சந்திரயான் 3, வெற்றிகரமாக நிலவின் நீள்வட்ட பாதையில் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா, ஜூலை 14 ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. இது வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி நிலவின் நீள்வட்ட பாதைக்குள் கடந்த வாரம் சென்றது. அதோடு சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தனியாக பிரிந்து, நிலவை நோக்கி சென்று கொண்டிருந்தது.




இந்நிலையில் அடுத்த கட்டமாக நிலவின் நீள்வட்ட பாதையில் தனது பயணத்தை லேண்டர் விக்ரம் நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்ல துவங்கி விட்டதாக இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதியை சென்றடைவதற்கு இன்னும் 25 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. மொத்தமாக நிலவின் தரைப்பரப்பை அடைவதற்கு 134 கி.மீ., மட்டுமே மீதம் உள்ளது. அடுத்த கட்டமாக நிலவின் தரைப்பரப்பில் வரும் புதன்கிழமையன்று லேண்டர் விக்ரம் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


விக்ரமின் உட்புறம் அனைத்தும் சரியாக உள்ளதாக என சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், எந்த இடத்தில் தரையிறங்கும் என கணிப்பதற்கு சூரிய உதயத்திற்காக காத்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ம் தேதி சுமார் மாலை 05.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.