நேற்று சந்திராயன் 3.. நாளைக்கு சந்திரமுகி 2.. மொத்தம் 10 பாட்டாம்..!

Su.tha Arivalagan
Aug 24, 2023,03:51 PM IST

சென்னை: சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீடு நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இப்படத்தில் 10 பாட்டுக்களை இசையமைப்பாளர் கீரவாணி போட்டுள்ளாராம். 


முதல் படம் எப்படி இசைக்காகவும் பேசப்பட்டதோ அதேபோல இரண்டாம் பாகமும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.




சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. தற்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ராகவா லாரண்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத், மகிமா நம்பியார் உள்ளிட்டோ் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது.


இந்த நிலையில் நாளை ஆடியோ லான்ச் என்பதை ராகவா லாரண்ஸ் தெரிவித்துள்ளார். அனைவரின் ஆசிர்வாதங்களும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். 


முதல் பாகத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தற்போது 2வது பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்துள்ளார். நம்ம ஊரில்  மரகதமணியாக அறியப்படும் கீரவாணி 10 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாட்டுக்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாடல்களைப் போலவே படத்தின் பின்னணி இசையும் பட்டையைக் கிளப்பும் வகையில் இருக்குமாம்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சந்திரமுகி 2 வெளியாகவுள்ளது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமும் உள்ளது.


2005ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா,நயன்தாரா நடிப்பில் உருவாகி வெளியான சந்திரமுகி முதல் பாகம் வசூலில் சாதனை படைத்தது. படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. அதேபோல இரண்டாம் பாகமும் அசரடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. அதுவரை நாளை வெளியாகப் போகும் பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.