மழை வருது மழை வருது குடைகொண்டு வா.. அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு.. ஜில் ஜில்தான்.. !

Meenakshi
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.




இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


14.06.2024 மற்றும் 15.06.2024: 


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


16.06.2024 மற்றும் 17.06.2024: 


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


 18.06.2024: 


தமிழகத்தில் ஒரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


19.06.2024 மற்றும் 20.06.2024: 


தேதிகளில் தமிழகத்தில் ஒரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:


14.06.2024 முதல் 18.06.2024 வரை:


அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலையாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.


 மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் ஜூன் 18 வரை மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று ஜூன் 14 முதல் தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகள் வடகிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 15,16 தேதிகளில் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக் கடல் பகுதிகளில் வரும் ஜூன் 18 வரை அரபிக் கடலில் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.