அலர்ட் மக்களே..  சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Meenakshi
Dec 15, 2023,06:23 PM IST

சென்னை: சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கிழக்கு திசை காற்றின் வேகம் வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக 16, 17 தேதிகளில் தென் தமிழகத்தில் அதிக இடங்களிலும், தமிழகத்தின்  ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


மழை பெய்ய வாய்ப்பு அதிகம் இருப்பதால் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.