வெயிலும் கொஞ்சம் மழையும்.. கலந்து செய்த கிளைமேட் வருது.. அடுத்த 2 நாட்களில்.. சூப்பர்ல!

Su.tha Arivalagan
Mar 26, 2024,05:39 PM IST

சென்னை: தமிழகத்தில் தற்போதைு கோடைகாலம் கொளுத்த ஆரம்பித்துள்ளது. இந்த கோடை காலத்தில் வெயில் வாட்டிக் கொண்டுள்ள நிலையில் கொஞ்சம் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து வருகிறது.


ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பங்குனி பிறந்து விட்ட நிலையில், வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


இந்த நிலையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வெயிலின் அளவு 2 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மழைக்கு சில இடங்களில் வாய்ப்புள்ளதாம். இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:




26/3/2024 முதல் 30/03/2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.31/03/2024 மற்றும்  1/4/2024 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26/3/2024 முதல் 30/03/2024 தமிழகத்தில் ஒரு இடங்களில் அதிக வெப்பநிலையும் அடுத்த ஐந்து தினங்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதே ஈரப்புறம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசெளவுகரியம் ஏற்படலாம்


சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்த வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.