பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு... நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது... மத்திய அரசு
சென்னை: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை காணப்படும். இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரேல் டீசல் விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கும் எனவும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.