பாலியல் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களும் டிஸ்மிஸ்.. கலாஷேத்திரா பவுண்டேஷன் தகவல்

Su.tha Arivalagan
Apr 04, 2023,09:50 AM IST
சென்னை: பாலியல் புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள. புகாரில் சிக்கிய மற்ற மூன்று பேரான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று கலாஷேத்திரா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இன்னும் 2 நாட்களில் டிஸ்மிஸ் உத்தரவு எழுத்துப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.  ஆனால் எழுத்துப்பூர்வ உத்தரவைப் பார்த்தால் மட்டுமே தாங்கள் தேர்வுகளை எழுதப் போவதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் நடத்திய போராட்டம் எதிரொலியாக ஏப்ரல் 6ம் தேதி வரை ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் விவகாரத்தில் கல்லூரியின் இயக்குநரும், நடனத்துறை தலைவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை புகார்கள் கொடுத்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் சார்பில் மத்திய கலாச்சாரத் துறைக்கு  கடிதம் எழுதப்பட்டது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால்தான் மாணவிகள் அதிரடியாக உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலையிட நேர்ந்தது. தேசிய மகளிர் ஆணையம் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டது. எழுத்துப்பூர்வமான புகார் வரப் பெற்றதும் காவல்துறை களத்தில் குதித்து தலைமறைவான உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனைக் கைது செய்தது.