சிபிஎஸ்இ.. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. இன்று முதல்.. ஆர்வத்துடன் தேர்வெழுதும் மாணவர்கள்!
சென்னை: 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரையிலும் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்வு தேதி வெளியிட்டதிலிருந்து தேர்வை எதிர்நோக்கி மாணவர்கள் தீவிரமாக தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் பொது தேர்வுகள் பிற்பகல் 1:30 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் நாடு முழுவதும் 8ஆயிரம் பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.