சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது

Meenakshi
Feb 15, 2024,11:56 AM IST

சென்னை:  சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.


சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கியுள்ள தேர்வு மார்ச் 13-ஆம் தேதி நிறைவடைகிறது. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது. இந்தத் தேர்வினை 36 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். 




இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைகிறது. ஒரு சில தேர்வுகள் மட்டும் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு அரைக்கு வரவேண்டும் என்றும், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வினாத்தாள்கள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள்களில் எதையும் எழுதக்கூடாது. தேர்வின் போது காப்பியடித்தல் கூடாது. அருகில் இருக்கும் மாணவர்களிடம் பேசக் கூடாது என சிபிஎஸ்சி நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.