மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத்திற்கு சிபிஐ மனுத்தாக்கல்
Aug 18, 2023,12:13 PM IST
டில்லி : மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து சிபிஐ தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பீகார் முதல்வராக இருந்த போது ரூ.950 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கிய விவகாரத்தில் ஊழல் செய்து அரசு பணத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் மீது சிபிஐ பல்வேறு வழக்கு தொடர்ந்து. மாட்டு தீவன ஊழல் தொடர்பான சுமார் 4 வழங்குகளில் லாலு பிரசாத்திற்கு ஜாமின் வழங்கி ஜார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்குகள் அனைத்திலும் லாலு பிரசாத் குற்றவாளி என தண்டனை பெற்றுள்ளார். இவர் மேல்முறையீடு செய்த மனுக்கள் பல்வேறு கோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இந்த சமயத்தில் அவருக்கு ஜாமின் வழங்கியது செல்லாது என எதிர்த்து சுப்ரம் கோர்ட்டில் சிபிஐ தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸட் 25 ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, லாலு பிரசாத்தின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேவஸ்வி யாதவ் ஆகியோர் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை ஏராளமானோரிடம் பல்வேறு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடு செய்ததாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.