குழந்தைகள் உலகத்திற்கு..தம்மை அழைத்துச் செல்லும் ..புஜ்ஜி அட் அனுப்பட்டி படம்.. விரைவில் வெளியீடு !

Manjula Devi
May 11, 2024,11:12 AM IST

சென்னை: குழந்தைகள் உலகம் அன்பானது. அந்த உலகத்திற்கு நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகாக மாறிவிடும் என்ற அடிப்படையில் நம்மை குழந்தைகள் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் புஜ்ஜி அட் அனுப்பட்டி படம் விரைவில் ரிலீஸாக உள்ளதாக இயக்குனர் கந்தசாமி  கூறியுள்ளார்.


ஹாலிவுட்டில் குழந்தைகளின் கதைக்களத்தை வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெரும். ஆனால் தமிழ் திரையுலகில் உள்ள குறை என்றால் குழந்தைகள் இடம்பெறும் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பது தான் புஜ்ஜி அட் அனுப்பட்டு திரைப்படம்.


இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தனது கவிலயா கிரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார். அருண்மொழிச் சோழன் ஒளிப்பதிவு செய்ய,

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.இதில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.




குழந்தைகளின்  உலகத்தை நம் கண் முன்னே பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்படத்தை 9 வி ஸ்டுடியோ நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.  இப்படத்தைப் பற்றி இயக்குனர் கந்தசாமி பேசும்போது,


குழந்தைகளின் உலகம் அன்பானது . அந்த உலகத்துக்குள் நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகானதாக மாறிவிடும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நமது உணர்வில் மாற்றம் ஏற்படும்.


ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. படம் பார்த்த பிறகு அனைவரும்  கூறியது இதுதான் 'இது குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்குமான படம்' என்பது தான். புஜ்ஜி விரைவில் திரைக்கு வருகிறது.இப்படத்தை  பார்த்துவிட்டுப் சென்சார் அதிகாரிகள் பாராட்டினர் என கூறியுள்ளார்.


படத்தின் கதை:


அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து,அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். ஆனால் சரவணனோ அதை உணவாகப் பார்க்கிறான். தந்தையோ இந்த ஆட்டை வித்து குடிக்கிறார். தங்கை துர்காவை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஆட்டுக்குட்டி வேண்டும் என கூறும் தங்கைக்காக ஆட்டுக்குட்டியை தேடி புறப்படுகிறார் சரவணன். புஜ்ஜியை தேடி தங்கை அண்ணனின் பயணமே படத்தின் மீதிக்கதை.