4 ஆண்டு சிறை.. பகுஜன் சமாஜ் கட்சியின் அப்சல் அன்சாரியின்.. எம்.பி பதவி காலி!

Su.tha Arivalagan
May 02, 2023,01:59 PM IST

டெல்லி: பாஜக எம்எல்ஏவைக் கடத்தில் கொலை செய்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அப்சல் அன்சாரியின், பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அப்சல் அன்சாரி, உத்தரப் பிரதேச மாநிலம் காஸிப்பூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  இவருக்கு எம்.பி. எம்எல்ஏ கோர்ட் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.



இவரது சகோதரர்தான் கிரிமினலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி. அவருக்கு இந்த வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டா ஆதிக் அகமது சகோதரர்கள் போலத்தான் இந்த அன்சாரி சகோதரர்களும். 

காஸிப்பூர் எம்எல்ஏவாக இருந்தவர் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராய். இவர் 2005ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அன்சாரி சகோதரர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல இதே கும்பலால் 1997ம் ஆண்டு வாரணாசியைச் சேர்ந்த வர்த்தகர் நந்த் கிஷோர் ருங்காத என்பவரும் கடத்திக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில்தன் தற்போது அன்சாரி சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்சல் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக லோக்சபா செயலகம் அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் ராகுல் காந்தியின் பதவியையும் லோக்சபா செயலகம் தகுதி நீக்கம் செய்தது என்பது நினைவிருக்கலாம்.