ப்ளூசட்டை மாறனுக்கு ஆனாலும் ஓவர் குசும்புதான்!
Aug 01, 2023,04:12 PM IST
சென்னை: ப்ளூ சட்டை மாறனுக்கு ஆனாலும் கொஞ்சம் .. இல்லை இல்லை.. ஓவர் குசும்புதான். ரஜினியை வச்சு செய்து கொண்டிருக்கிறார் டிவீட் மேல் டிவீட் போட்டு.
ஒவ்வொரு பிரபல நடிகரையும் உறண்டை இழுப்பதே ப்ளூசட்டை மாறனுக்கு வாடிக்கையாகி விட்டது. சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வந்து வந்து வெளுத்து வாங்கும் விதமாக வாயை விட்டு ஏடாகூடமாக திட்டினாலும் கூட அதற்கெல்லாம் சற்றும் அஞ்சுவதே கிடையாது மாறன்.
இப்போது ரஜினிகாந்த்தை கையில் எடுத்துள்ளார் மாறன். ரஜினியின் ஜெயிலர் படம் தொடர்பாக தொடர்ந்து ஏதாவது உசுப்பேத்திக் கொண்டே இருக்கிறார். ரசிகர்களும் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தற்போது ரஜினி சொன்ன காக்கா - பருந்து கதையை வைத்து ஒரு டிவீட் போட்டுள்ளார்.
அந்த டிவீட் இதுதான்:
72 வயது ஆனாலும் தலைவர் இன்னும் கெத்தாக நடிக்கிறார். இந்தியாவில், ஏன் ஆசியாவிலேயே எந்த நடிகராவது இந்த வயதுவரை நடிக்க முடியுமா? - பருந்துக்குஞ்சு.
எதுக்கு அவ்வளவு தூரம் போகனும்? தமிழ்நாட்லயே உண்டு.
தனது 86 வயதுவரை.. தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் அசத்திய நடிகர் ஒருவர் உண்டு. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த பெருங்கலைஞர். சில குறிப்பிடத்தக்க படங்கள்:
பைத்தியக்காரன் 1947 (Debut Film), மணமகள், மனோகரா, துளி விஷம், மங்கையர்க்கரசி, கப்பலோட்டிய தமிழன், தேவர் மகன், மே மாதம், வியட்நாம் காலனி, மனதை திருடி விட்டாய், வசூல் ராஜா MBBS.
அவரது பெயர்:
'காக்கா' ராதாகிருஷ்ணன் என்று ப்ளூசட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் அனலைக் கிளப்பியுள்ளது. இந்த டிவீட்டுக்கு சமூக வலைதள பிரபலம் கிஷோர் கே சாமி பதில் போட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே ஒரு சிறு உரையாடலே நடந்துள்ளது. அதையும் படிங்க:
கிஷோர் - ஒரு துணை நடிகருக்கும் ஒரு படத்தையே தனது தோள்களில் சுமப்பவருக்கும் வித்தியாசமிருக்கு , கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் முன்னிலை வகிப்பது இன்று இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்வது அதையும் ஆளும்கட்சிக்கு ஜால்றா போடாமல் தக்க வைப்பது என்பது சாதனையே , ஆமாம் இந்த வயதிலும் அவரால 30 நிமிடங்கள் மொத்த ஆடியன்ஸையும் தனது பேச்சினால் கட்டிப்போட முடிகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை. இதையெல்லாம் கடந்து ரஜினி என்கிற தனி நபர் ஒரு சகாப்தம்
ப்ளூ சட்டை - ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடாமல்? மத்திய பாஜக அரசா?
கிஷோர் - சார் மத்திய அரசாங்கம் என்றைக்கும் தமிழகத்தில் கோலோச்சியதில்லை அது உங்களுக்கு தெரியாமலும் இல்லை. என்ன அந்த கருணாநிதி பாராட்டு விழாவுக்கு வாரா வாரம் போகவேண்டியிருந்தது மற்றபடி மாநில ஆளும் கட்சிகளுக்கு ஜால்றா போட்டு படத்தை ஓட்டவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை.
ப்ளூ சட்டை - என்ன கிஷோர்? பாசத்தலைவருக்கு பாராட்டு விழா பலமுறை நடந்தபோது பக்கத்து இருக்கையில் அமர்ந்தது யார்? மேடையில் பாராட்டியது யார்?
தனது கட் அவுட்டிற்கு பால், பீர் அபிசேகம் செய்தல், ப்ளாக் டிக்கட் விற்றல் - வாங்குதல் போன்றவற்றை ரசிகர்கள் செய்யக்கூடாது என்று இதுவரை ஏன் சொல்லவில்லை?
இதற்கு உங்கள் கருத்தென்ன?
கிஷோர் - அதான் சொல்லிட்டேனே சார் கருணாநிதி பாராட்டு விழாவிற்கு எல்லா நடிகர்களும் வரவேண்டிய நிலை. கருணாநிதி இவரது நண்பரும் கூட. ரசிகர்கள் கடவுட் வைப்பது பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை என்ன தான் தடுத்தாலும் அது நடக்கத்தான் போகுது அதுவும் சினிமாவில் மட்டுமா அது நடக்குது ? பூப்புனித விழா முதல் திருமணம் வரை இப்போல்லாம் பேனர்கள் வந்துருச்சு , இதுல அவரை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும் , சரி அதற்கும் அவரோட ஸ்டார் வால்யூவுக்கும் எப்படி முடிச்சு போடமுடியும்
ப்ளூ சட்டை - என்ன தடுத்தாலும் அநியாயங்கள் நடக்கும். ஆனால் அவற்றுக்கு எதிராக நீங்கள் குரல் தருவதைப்போல.. அவர் தன் பொறுப்புணர்ந்து இப்படியான நடவடிக்கைகளில் தன் ரசிகர்கள் ஈடுபட வேண்டாமென சொல்வதில் தவறு உள்ளதா? இப்படி ஓடியுள்ளது அந்த விவாதம்.