இந்த ஆண்டே லோக்சபா தேர்தல்.. தயாராகும் பாஜக.. பகீர் கிளப்பும் மம்தா

Aadmika
Aug 29, 2023,09:34 AM IST
கோல்கத்தா : இந்த ஆண்டு இறுதியிலேயே லோக்சபா தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை பாஜக துவங்கி விட்டதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பார்ஜி, நேற்று கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பாஜக பற்றி மிக கடுமையாக விமர்சித்ததுடன், அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல தகவல்களை வெளியிட்டார்.

கூட்டத்தில் பேசிய மம்தா, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து,சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்த பாஜக நினைக்கிறது. மேற்குவங்கத்தில் சிலர் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் நடத்த பாஜக ஊக்குவிக்கிறது. இதனால் பல இடங்களில் பட்டாசு ஆலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு போலீசார் சிலரே துணை போகிறார்கள். பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார ஆட்சியை தான் சந்திக்க வேண்டி வரும். 

எனக்கு தெரிந்த வரையில் 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதமே லோக்சபா தேர்தலை பாஜக நடத்தவும் வாய்ப்புள்ளது. காவி கட்சி ஏற்கனவே நமது நாட்டை மத பிரிவினைகளை உண்டாக்கி, மிருங்களை போல் அடித்துக் கொள்ள செய்து விட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நாட்டில் வெப்புணர்வு அதிகரிக்க துவங்கி விடும். 

லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக ஏற்கனவே பாஜக அனைத்து ஹெலிகாப்டர்களையம் புக் செய்து விட்டது. வேறு எந்த அரசியல் கட்சியும் ஹெகாப்டரை பயன்படுத்த முடியாது. நான் மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்தவள். தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக.,வை தோற்கடிக்கப் போகிறேன். 

கோலி மாரோ கோஷமிட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது போன்ற கோஷங்களை எழுப்ப இது உத்திர பிரதேசம் கிடையாது. வங்காளம் என்பதை மறந்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.