தரக்குறைவான பிரச்சாரங்களில் ஈடுபடாதீர்கள்.. பாஜகவினருக்கு நட்டா உத்தரவு

Su.tha Arivalagan
Apr 05, 2023,09:30 AM IST

டெல்லி: பாஜகவினர் கட்சியின் மதிப்பையும், கண்ணியத்தையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் தரக்குறைவான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது கட்சியின் சமூக வலைதளப் பிரிவினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவ நிர்வாகிகளுக்கான கருத்துப் பட்டறை ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இதுதொடர்பாக நட்டா பேசியதிலிருந்து சில துளிகள்:

பாஜக மிகப் பெரிய கட்சி மட்டுமல்லாமல், மிகத் திறமையானவர்களை உள்ளடக்கிய கட்சியும் கூட. நமது கட்சியும், ஆட்சியும் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாம் எவ்வாறு சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நமது கட்சியினரின் திறமைகளை மேலும் திறம்பட  வடிகட்டி அதை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் 
நோக்கில் சமூக வலைதள அணிகள் செயல்பட வேண்டும்.  நம்பகமான, மக்களுக்குத் தேவையான செய்திகளையே சமூக வலைதளங்கள் மூலம் நமது கட்சியினர் பரப்ப வேண்டும்.

சமூகவலைதளங்கள் மிகவும் தாக்கத்த ஏற்படுத்தக் கூடியவை. அதை மக்களுக்கா, குறிப்பாக இளைஞர்களை திறம்பட வழி நடத்த பயன்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உடனடியாக பதில் தர  சமூக வலைதளங்கள்தான் நமக்கு உதவும் என்றார் நட்டா.

இந்தக் கருத்தரங்கில், பாஜகவின் சமூக வலைதள பிரிவு செயலாளர் அமித் மாளவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

சமீபகாலமாக பாஜகவின் ஐடி விங் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. தவறான தகவல்கள், தவறான வீடியோக்கள், தவறான புகைப்படங்கள் அதிக அளவில் பாஜக ஐடி விங் மூலமாக பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வட இந்தியத்  கொலை செய்யப்படுவதாக மிகத் தவறான வீடியோ மற்றும் செய்திகளையும் கூட பாஜக ஐடி விங்கசை் சேர்ந்தவர்கள்தான் பரப்பினார்கள் என்றும் சலசலப்பு எழுந்தது. இதுதொடர்பாக  சில பாஜகவினர் மீது வழக்கு  தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.