பாஜக, பாமக, தமாகா, அமமுக தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.. ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ். போட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த விவரம் வருமாறு:
பாஜக தொகுதிகள் (19)
பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் - திருவள்ளூர் (தனி), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி
பாமக தொகுதிகள் (10)
காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல்.
தாமரை சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள் (4)
புதிய நீதிக் கட்சி - வேலூர், இந்திய ஜனநாயகக் கட்சி - பெரம்பலூர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - சிவகங்கை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - தென்காசி (தனி).
தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதிகள் (3)
ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர்
அமமுக (2)
திருச்சி, தேனியில் அமமுக போட்டியிடும்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு (1)
ராமநாதபுரம் - ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார்.