பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்த பிறகு தான் தினம் ஒரு டாஸ்க் தருவார் பிக்பாஸ். அதுவும் பஸ்ஸர் அடித்து அனைவரையும் அலார்ட் செய்து, கேமின் விளையாட்டு விதிகளை சொல்லி, அதற்கு பிறகு தான் பசர் அடித்து விளையாட்டை ஆரம்பிப்பார்.
பிக்பாசில் டாஸ்க், கேம் எல்லாம் ஆரம்பித்த பிறகு தான் அடித்தடி, போட்டி, சண்டைகள் எல்லாம் வரும். இதை தான் கடந்த 7 சீசன்களாக பார்த்து வருகிறோம். இதுவரை ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று தான் கமல் சொல்லிக் கொண்டிருப்பார். யாராவது தப்பு செய்தால் குறும்படம் போட்டு காட்டி விடுவார். ஆனால் சீசன் 8, ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்றார்கள். இது வழக்கமான பஞ்ச் டயலாக் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தால், இது சூசகமாக ரசிகர்களுக்கு நிகழ்ச்சி பற்றி பிக்பாஸ் டீம் சொன்ன க்ளூ என்பது இப்போது தான் தெரிகிறது.
வழக்கமாக பிக்பாஸ் சீசன்களில் துவக்க நாளில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மேடைக்கு வந்து கமலை சந்தித்து, தங்களை அறிமுகம் செய்து கொண்டு வீட்டிற்குள் செல்வார்கள். அங்குள்ள லிவ்விங் ஏரியாவில் சென்று அமர்ந்த பிறகு தான் பிக்பாஸ் பேசி, அனைவரையும் வரவேற்பார். ஆனால் இந்த முறை 6 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் வீட்டின் கதவே திறக்கப்பட்டது. வீட்டிற்கு 6 பேர் சென்றதுமே அவர்களுக்கு முதல் டாஸ்காக வீட்டை சுற்றி பார்க்க சொன்னார் பிக்பாஸ்.
டாஸ்க் என தெரியாமல் சாதாரண சுற்றி பார்த்து விட்டு வந்தவர்களிடம், வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் இருக்க வேண்டும். யார் எந்த பக்கத்தில் இருக்க போகிறீர்கள் என்பதை நீங்களே பேசி முடிவு செய்யுங்கள் என சொல்லி விட்டார் பிக்பாஸ். ஆனால் ஆண்கள், பெண்கள் இருவருமே சிங்கிள் பெட், பிங்க் பகுதி தான் வேணும் என வாக்குவாதம் செய்ய துவங்கி விட்டனர். இதை கண்ட ரசிகர்கள், இது தான் நீங்க சொன்ன அந்த புது ஆட்டமா என கேட்டு வருகின்றனர்.
இத்தனைக்கும் போட்டியாளர்கள் முழுவதுமாக வந்து முடியவில்லை. கேமும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்குள் வீட்டிற்குள் போட்டா போட்டி ஆரம்பமாகி விட்டது. நல்ல கொளுத்தி போட்டுறீங்க பிக்பாஸ் என சோஷியல் மீடியாவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்று மாலை முதல் நாள் பிக் பாஸ் வீட்டுச் சேட்டைகளை காண மக்கள் ஆர்வமாக காத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்