அடேங்கப்பா.. பிக்பாஸ் சீசன் 7 தொகுத்து வழங்க கமலுக்கு சம்பளம் இவ்வளவா?

Aadmika
Aug 04, 2023,10:33 AM IST
சென்னை : பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார் என்பது உறுதியாகி விட்டது. இதற்காக இவருக்கு பேசப்பட்டுள்ள சம்பள தொகை அனைவரையும் பிரமிக்க வைத்து, வாய் பிளக்க வைத்துள்ளது.

விஜய் டிவியில் வெற்றிகரமாக, அதிக ரசிகர்களை உலகம் முழுவதும் கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியின் முதல் 6 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் 7 வது சீசன் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாகவும், இதையும் கமலே தொகுத்து வழங்க உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனால் வழக்கம் போல் இந்த நிகழ்ச்சிக்கு கமலுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல், விவாதங்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு ரூ.100 கோடி சம்பளம் தரப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, 7 வது சீசனை தொகுத்து வழங்க ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்திற்கு பிறகு கமலின் மார்கெட் தாறுமாறாக ஏறி உள்ளதாம். 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் கிட்டதட்ட 400 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கமலுக்கு, தற்போது கமிட்டாகி உள்ள பாலிவுட் படமான கல்கி 2898 ஏடி படத்தில் 20 நாட்கள் நடிப்பதற்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதே போல் அவரின் அடுத்த படமான, அதிக எதிர்பார்க்கப்படும் ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கும் 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இந்தியன் 2 படமும் எப்படியும் 500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கமலுக்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பேசி உள்ளார்களாம். 

100 நாட்கள் நடக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல் வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வருவார். அப்படி பார்த்தால் 25 நாட்கள் மட்டும் தான் கமல் வருவார். இதற்கு ஒரு நாளைக்கு கமலுக்கு சம்பளம் ரூ.6 கோடி ஆகும். பிக்பாஸ் சீசன் 7 ஆடிசன் தற்போது நடந்த வருவதால் விரைவில் இந்த நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.