முடிவுக்கு வரும் பாரதி - கண்ணம்மா?.. திருமணத்தில் இணையப்போவதாக ஆர்.ஜி. பாலாஜி ட்விட்..!

Baluchamy
Feb 02, 2023,11:50 AM IST
"பாரதி - கண்ணம்மாவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டேன்" என நடிகர் ஆர்.ஜி. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் பகிர்ந்துள்ளார்.



டிவியில் ஏகப்பட்ட சானல்கள் இருந்தாலும் தாய்மார்கள் விரும்புவது விஜய் டிவியை தான். டிவி ரிமோட்டை எடுத்தாலே விரல்கள் ஆட்டோமெட்டிக்காக விஜய் டிவியை தான் தேடும். கலகலப்பான நிகழ்ச்சிகள், சுவாரசியமான சீரியல்கள் என விஜய் டிவி எப்போதும் பிஸியாகவே இருப்பதே இதற்குக் காரணம்.

அந்தவகையில் விஜய் டிவியில் இரவு ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் ஃபேவரேட் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு தனது முதல் அடியை எடுத்துவைத்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது வரை பல எபிசோடுகள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ் என சுமாராக ஓடிக்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் போக போக சுவாரசியத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒட்டுமொத்த தாய்மார்களையும் கண் இமைக்காமல் பார்க்க வைத்தது. 

காதல், ரொமான்ஸ் என பஞ்சாயத்து இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த சீரியலில் கண்ணம்மாவின் கர்ப்பம் பிரச்சனையாக உருவெடுத்தது. பாரதி, கண்ணம்மாவின் கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என பாரதி  சொல்ல, ஆரம்பித்தது பஞ்சாயத்து.

கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பியதும், ரோஷத்துடன் கண்ணம்மா கையில் ஒரு பேக்கை வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தெருத்தெருவாக நடந்து சென்றதை ஒரு வரமாக ஒளிபரப்பிய விஜய் டிவி டிஆர்பியில் எங்கேயோ சென்றுவிட்டது. இப்படி தெருத் தெருவாக நடந்த கண்ணம்மாவை தாய்மார்கள் ஐயோ பாவம்! என பரிதாபமாக பார்த்தாலும், நெட்டிசன்கள் இதெல்லாம் ஒவ்வாரு! என மீம்ஸ் மூலம் கலாய்த்து தள்ளினர்.  இந்த நிலையில் கண்ணம்மாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

குழந்தையின் அப்பா பாரதி தான் என கண்ணம்மா சொல்ல பாரதி "நான் அவன் இல்லை" என கைவிரித்துவிட்டார். கடுப்பான கண்ணம்மா பிளட் டெஸ்ட் எடுத்து பார்ப்போம் என சொல்ல அதெல்லாம் முடியாது என பாரதி மறுத்துவிட பரபரப்பு கூடியது. இப்படியாக பிளட் டெஸ்ட் ஒன்று எடுத்துவிட்டால் பஞ்சாயத்தே முடுஞ்சுருமே! பிளட் டெஸ்ட் மட்டும் எடுத்துருப்பா! பாரதி என தாய்மார்கள் கமெண்ட் அடிக்க சீரியல் ஜவ்வாக இழுத்து கொண்டு போனது. இடையில் ஹீரோயினே மாறி விட்டார். ஆனாலும் அந்த பிளட் டெஸ்ட் மட்டும் எடுக்கவே இல்லை.

இந்நிலையில் இறுதியாக பிளட் ரெஸ்ட் எடுத்த பாரதிக்கு கண்ணம்மாவின் குழந்தைகள் நம்ம குழந்தைகள் தான் என்ற உண்மை தெரியவர மனஉளைச்சலுக்கு ஆளானார் பாரதி. ஆரம்பத்தில் கண்ணமாவிடம் விவாகரத்து கேட்டிருந்த பாரதிக்கு கண்ணம்மா விவாகரத்து கொடுத்துவிட்டார். மனஉளைச்சலில் இருந்த பாரதிக்கு இந்த விவாகரத்து வேதனையை கொடுத்தது. 

இதுக்கு மேலும் எங்களுக்குத் தாங்காது.. ஏதாவது பண்ணி முடிங்கய்யா என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பிக்க.. அது  டைரக்டர் காதுக்குப் போச்சோ என்னவோ இப்ப என்ட் கார்ட் போடத் தயாராகிட்டாங்களாம்.
விவாகரத்து ஆன பாரதியும் கண்ணம்மாவும் சமாதானம் ஆகிவிட மீண்டும் இருவரும் திருமணம் செய்யப்போவதாக  ஒரு வீடியோவை போட்டுள்ளது விஜய் டிவி.

இந்நிலையில் நடிகர் ஆர்.ஜி. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதி - கண்ணம்மா சீரியலை வைத்து போஸ்ட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதில், இறுதியாக நான்கு வருடங்களாக தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாரதி - கண்ணம்மாவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டேன் என பாரதி - கண்ணம்மா ப்ரோமோஷன் வீடியோவுடன் போஸ்ட் செய்துள்ளார்.

ஆர்.ஜி. பாலாஜி நடிப்பில் உருவான "ரன் பேபி ரன்" திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பாரதி - கண்ணம்மா சீரியலில் இணைந்துள்ளார் பாலாஜி. காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த பாலாஜி இம்முறை திரில்லர் கதை களத்தில் இறங்கியுள்ளார்.

நெட்டிசன்கள் பலர் பாலாஜியின் இந்த போஸ்டுக்கு "ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.