"என்னவளே.. நீ என்றும் என்னவளே".. காதலில் உருகிய  பராக் ஒபாமா!

Su.tha Arivalagan
Oct 04, 2023,09:49 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது கல்யாண நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். காதல் ரசம் சொட்டச் சொட்ட தனது மனைவி மிச்சல் ஒபாமாவை அவர் வாழ்த்தியுள்ளார்.


அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்தவர் பராக் ஒபாமா. சட்ட நிபுணரான இவரது மனைவி மிச்சல் ஒபாமா, ஒரு ஸ்டைல் ஐகான். இவரும் வழக்கறிஞரே. இருவரும் மேட் பார் ஈச் அதர் என்று சொல்லும் அளவுக்கு சரியான ஜோடிகள்.


குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஒபாமா. அதேபோலத்தான் மிச்சலும். இருவருக்குள்ளும் இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகள். இருவரும் ஜனநாயக வாதிகள்.. மனதில் பட்டதை பட்டென்று சொல்வது இவர்களது வழக்கம்.


இந்த ஜோடி அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானது. இவர்களைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு பலருக்கும் பிடித்த ஜோடி. அக்டோபர் 3ம் தேதி ஒபாமா தம்பதியின் திருமண நாள். இதையொட்டி ஒரு அழகான வாழ்த்தை டிவீட் செய்துள்ளார் பராக் ஒபாமா.


ஒரு அழகான வயல்வெளி.. வயலோ சாலையில் ஒயிலாக நிற்கிறார்கள் ஒபாமாவும், மிச்சலும். இருவரும் ஒரே நிறத்தில் உடை.. நீல நிறத்தில். இணைந்து நிற்பதிலிருந்தே தெரிகிறது அவர்களது காதல் வாழ்க்கையின் அழகு.. அங்கு பிறக்கிறது காதல் வாழ்த்து..


"Happy anniversary, sweetheart!  @MichelleObama, you're brilliant, kind, funny, and beautiful—and I'm lucky to call you mine" இப்படி கூறி அழகாக வாழ்த்தியுள்ளார் பராக் ஒபாமா.


பதிலுக்கு மிச்சல் ஒபாமாவும் க்யூட்டாக வாழ்த்தியுள்ளார் தனது காதல் கணவரை.. "31 years, and a lifetime to go. I love going through life with you by my side, 

@BarackObama . Happy anniversary, honey! என்று கூறி உருகியுள்ளார் மிச்சல் ஒபாமா.


சில காதல்கள் அழகானவை.. சில கல்யாணங்கள் அழகானவை.. இரண்டும் இணையும் போது அவை பேரழகானவை.. அந்த வகையில் ஒபாமாக்கள்.. பேரழகானவர்கள்!