"என்னாது.. எனக்கு ரூ. 9000 கோடியா".. டிரைவரை ஜெர்க் ஆக வைத்த வங்கி!
Sep 21, 2023,05:11 PM IST
சென்னை : சென்னையை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். இவரது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே பேலன்ஸ் இருந்துள்ளது. ஆனால் ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துள்ளது. ஒரே நாளில் 9000 கோடி, அதுவும் தன்னுடைய கணக்கிற்கு யார் டெபாசிட் செய்யப் போகிறார்கள்? தன்னை யாரோ ஏமாற்ற முயற்சி செய்வதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.
இருந்தாலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் 9000 கோடி இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்த அவர், தன்னுடைய நண்பருக்கு ரூ.21,000 ஐ அனுப்பி சோதனை செய்துள்ளார். அதே போல் ரூ.21,000 அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் ராஜ்குமார். அந்த சமயத்தில் ராஜ்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உயரதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லி, விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.