பொதுத்துறை வங்கிகளில்.. 665 எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க ரெடியா.. கடைசி தேதி ஜூன் 21!

Manjula Devi
Jul 03, 2024,04:45 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் 6 பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (clerk) பிரிவில் காலியாக உள்ள 665 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. கடைசி நாள் ஜூலை 21 ஆகும்.

ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப் பணியிடங்களை ஐ பி பி எஸ் நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடம் இந்தியா முழுவதும் எழுத்தர் பணிக்கு மொத்தம் 6128 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த எழுத்தர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு,பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க் உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் பணியமத்தப்பட உள்ளனர். 



குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பிரிவில் 665 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.

விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

எழுத்தர் பணிக்கான தகுதி: 

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.1996 ஜூலை இரண்டாம் தேதி முதல் 2004 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் அதாவது 20 முதல் 28 வயதுக்குள் உள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 
 
தேர்வு: 

இதில் ப்ரிலிமினரி தேர்வு மற்றும் மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் ஃப்ரீ தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொடர்ந்து அக்டோபர் மாதம் முதன்மை தேர்வு நடைபெறும். இந்த முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினர்களுக்கு ரூபாய் 175, மற்றவர்களுக்கு ரூபாய் 850  விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்சி/ எஸ் டி மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த தேர்வுக்கான பயிற்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.