பிச்சுக் கட்டிய டிராபிக்.. "ஆறாம்சே".. காருக்குள் பீன்ஸ் உரித்த பெண்.. செம!

Su.tha Arivalagan
Sep 18, 2023,01:41 PM IST

பெங்களூரு: பெங்களூரு எதற்கு பெயர் போனது தெரியுமா.. முன்பு கார்டன்களுக்கு.. இப்போதோ கண்ணைக் கட்டும் டிராபிக்குக்கு. அப்படிப்பட்ட டிராபிக்கில் ஒரு பெண் செய்த காரியம் பலரையும் கலகலப்பாக்கியுள்ளது.


பெங்களூரில் உள்ள எல்லா சாலைகளும் இடியாப்பச் சிக்கலாகியுள்ளன. இத்தனை  லட்சம் பேரை தாங்கக் கூடிய சக்தி இயற்கையாகவே அந்த ஊருக்கு இல்லை. ஆனால் காலத்தின் கோலமாய், பல லட்சம் மக்கள் அன்றாடம் சாலைகளைப் பயன்படுத்துவதால் போககுவரத்து  தினறிக் கொண்டிருக்கிறது. என்னென்னவோ செய்து பார்த்தும் கூட போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடாக இல்லை.


பெங்களூரில் ஒருவர் காரில் செல்வதாக இருந்தால் சராசரியாக போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரம் என்று ஒரு புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது.  அதாவது 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் ஆகுமாம். இது கூடவும் செய்யலாம். அந்த அளவுக்கு மோசமான டிராபிக் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது பெங்களூரு.




இந்த நிலையில் காரில் பயணித்த ஒரு பெண் போக்குவரத்து நெரிசலில் தனது நேரம் வீணாகாமல் புத்திசாலித்தனமான ஒரு காரியத்தைச் செய்து அசத்தியுள்ளார். காரில் பயணியாக பயணித்த அவர் போக்குவரத்து நெரிசலில் கார் நின்று நின்று போன அந்த நேரத்தை வீணடிக்காமல் பீன்ஸ் உள்ளிட்ட தான் வாங்கி வந்த காய்கறிகளை உரித்தும், ஆய்ந்தும் சூப்பராக தனது வீட்டு வேலையை செய்து முடித்து விட்டார். அதை போட்டோவும் எடுத்து டிவிட்டரில் போட செம கலகலப்பாகி விட்டது டிவிட்டர்.


இந்த புகைப்படத்திற்கு  கமெண்ட்டுகள்குவிந்து வருகின்றன. மேடம் நீங்க வேற லெவல் என்று பலரும் பாராட்டியுள்ளனர். பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவே சிறந்த உதாரணம் என்றும் பலர் கிண்டலடித்துள்ளனர்.


எப்படியும் டிராபிக்கைக் கடந்து வீட்டுக்குப் போய்ச் சேருவதற்குள் உடம்பெல்லாம் வலித்து டயர்டாகி விடும். அதற்கு கொஞ்சம் எனர்ஜி இருக்கும்போதே காய்கறிகளை உரித்து வைத்து விட்டால் வீட்டுக்குப் போய் அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கலாமே.. எனவே இந்தப் பெண்மணியை எல்லோரும் பாலோ செய்தால் வீட்டில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கலாம்!