செப்டம்பர் 06 - 16 வகையான செல்வங்கள் தரும் கிருஷ்ண ஜெயந்தி
Sep 06, 2023,09:32 AM IST
இன்று செப்டம்பர் 06, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி -20
கோகுலாஷ்டமி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 09.13 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 03.24 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மாலை 03.24 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
சுரங்க பணிகளை மேற்கொள்ள, பயனற்ற மரங்களை வெட்டுவதற்கு, ஹோமம் போன்ற பணிகளை செய்வதற்கு, கடன் அடைப்பதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கிருஷ்ண ஜெயந்தி என்பதால் கண்ணனை வழிபட அனைத்து விதமான செல்வ நலன்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - தாமதம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நட்பு
கடகம் - அச்சம்
சிம்மம் - சிரமம்
கன்னி - அசதி
துலாம் - வரவு
விருச்சிகம் - சுகம்
தனுசு - திறமை
மகரம் - கவலை
கும்பம் - வெற்றி
மீனம் - பகை