ஏப்ரல் 13 - இன்று நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாளா?

Aadmika
Apr 13, 2023,08:28 AM IST

இன்று ஏப்ரல் 13 வியாழக்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 30

தேய்பிறை அஷ்டமி, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 02.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. அதிகாலை 02.51 துவங்கி, ஏப்ரல் 14 அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.44 வரை பூராடம் நட்சத்திரம், பிறகு உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சுரங்கம் அமைப்பதற்கு, கிணறு தோண்ட, கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடுவதற்கு, போர்வெல் போடுவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


இன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி என்பதனால் பைரவரை வழிபட துயரங்கள் அனைத்தும் நீங்கும்.