ஆசிய விளையாட்டு 2023: அடுத்தடுத்து தங்கத்தை அள்ளும் இந்தியா!

Meenakshi
Sep 27, 2023,12:01 PM IST

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 


சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட் , குதிரையேற்றத்தில் தங்கம் வென்றிருந்தது.  நேற்று மட்டும் 3 தங்கம், 4வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது. 




இந்நிலையில்  இன்று 50மீ ரைபிள் 3 பிரிவில் இந்திய அணி  வீராங்கனை சிப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை ஆஷி சவுக்சி வெண்கலப்பதக்கம் வென்றார். இவரை தொடர்ந்து வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் மேலும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.


ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் 5 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் இந்தியாவிற்கு இதுவரை கிடைத்துள்ளது.