ஐப்பசி பிறந்தாலும் பொறந்துச்சு.. அதிரடியாக உயர்ந்து ஷாக் கொடுத் தங்கம்!
சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. ஐப்பசி மாதம் பிறந்து விட்டதால் இனி தங்கத்தின் விலை உயர்விலேயே இருக்கும் என்று தெரிகிறது.
நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்திருந்த தங்கம் இன்றும் உயர்வை நோக்கி சென்று மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மக்கள் ஷாக்காகி போய் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. நேற்றும் இன்றும் சேர்ந்து சவரனுக்கு ரூ. 580 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5585 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44680 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6093 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து இன்று ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.50 காசாக உள்ளது.
புரட்டாசியில் குறைந்திருந்த தங்கம் விலை ஐப்பசி தொடங்கியதில் இருந்தே ஏற்றம் கண்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்தே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.